மேற்கு, மத்திய, தெற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல பிரதேசங்களிலும், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் முல்லைத்தீவு, இரத்தினபுரி, கேகாலை, கண்டி மற்றும் களுத்துறை மாவட்டங்களின் பல இடங்களில் மணிக்கு சுமார் 50 மில்லிமீற்றர் கனமழை பதிவாகக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பு – காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடற்கரையோர பிரதேசங்களில் ஒரளவு மழை காணப்படும் என்றும் மாத்தளை – அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்கரையோர பிரதேசங்களில் மணிக்கு சுமார் 50 முதல் 55 கிலோமீற்றருக்கு அதிகமான காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், தென் மாகாணங்களில் மணிக்கு சுமார் 40 தொடக்கம் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலமான காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது பலமான காற்றுவீசக்கூடும் என்பதனால் மின்னல் தாகக்த்தினால் ஏற்படும் பாதிப்புக்களைத் தவிர்த்துக்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.


Post a Comment
Post a Comment