கிழக்கில் பிரமாண்டமான பொத்துவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல்,இன்று திறக்கப்படுகின்றது




#Ismail Uvaizur Rahman
சுமார் 25 கோடி ரூபா செலவில் கிழக்கில் பொத்துவில் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பொத்துவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் இன்ஷா அல்லாஹ்.இன்று  திறக்கப்பட்டு வக்பு செய்யப்படுகிறது!
மர்ஹூம் சதக்கத் ஹாஜியார் என்னும் பிரபல ஜெம் வர்த்தகரினதும் அவரது பிள்ளைகளினதும் முழு முயற்சி மற்றும் தனிப்பட்ட நிதிகள் மூலமே இப்பள்ளிவாசல் அழகுற நிர்மாணிக்கப்பட்டுள்ளது!

மர்ஹூம் சதக்கத் ஹாஜியார் பொத்துவில் பகுதியை பிறப்பிடமாக கொண்டவர், எகலியகொட பகுதியில் திருமணம் செய்து மாணிக்க கல் வியாபாரத்தில் மிக பிரசித்திபெற்று விளங்கிய கோடீஸ்வரர் என்பது குறிப்பிடத்தக்கது!
எல்லாம் வல்ல இறைவன் அவரது உயரிய நோக்கங்களை அங்கீகரித்து அருள் புரியட்டும்!