ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கூரற்ற ஆயுதத்தால் தலையில் பலமாகத் தாக்கப்பட்டமையாலேயே உயிரிழந்தமையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
லசந்த விக்ரமதுங்கவின் இரண்டாவது பிரேதப்பரிசோதனை அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு நீதிமன்றம் இந்த விடயத்தை ஏற்றுக்கொண்டுள்ளது.
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு கல்கிசை பிரதம நீதவான் மொஹமட் நிஹைம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இரண்டாவது தடவை மேற்கொள்ளப்பட்ட பிரேதப்பரிசோதனையின் அறிக்கையை மூவரடங்கிய வைத்தியர் குழாம் மன்றில் இன்று சமர்ப்பித்தது.
துப்பாக்கிச்சூட்டினால் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க உயிரிழந்ததாக ஏற்கனவே தயாரிக்கப்பட்ட பிரேதப்பரிசோதனை அறிக்கையை நீதிமன்றம் இன்று நிராகரித்தது.
இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Post a Comment
Post a Comment