குணச்சித்திர நடிகர் சண்முக சுந்தரம் காலமானார்



கரகாட்டக்காரன், சென்னை 600028 உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரபல குணச்சித்திர நடிகர் சண்முக சுந்தரம் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
சிவாஜி கணேசன் நடிப்பில் 1963-ஆம் ஆண்டு வெளியான ரத்த திலகம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சண்முக சுந்தரம்.
அதனைத் தொடர்ந்து அவர் நடித்த கர்ணன், தசாவதாரம் உள்ளிட்ட பல படங்கள் அவருக்கு பெயர் சொல்லும் படங்களாக அமைந்தன.
அதிலும் கரகாட்டக்காரன் படத்தில் அவரது நடிப்பும், வசன உச்சரிப்பும் அனைத்து தரப்பினரையும் ரசிக்க வைத்ததுடன் குணச்சித்திர நடிகராக அவரது சினிமாப் பயணத்திற்கு வழிசெய்தது.
சிம்பு நடித்த அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தில் கடைசியாக நடித்திருந்தார்.
அதுமட்டுமல்லாமல், அண்ணாமலை, செல்வி, அரசி, வம்சம் உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.
அவரது உடல் சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.