தன்னாமுனையில் தடம் புரண்ட லொறி



மட்டக்களப்பு, தன்னாமுனைப் பகுதியில் இன்று அதிகாலை லொறி ஒன்று தடம்புரண்டதன் காரணமாக அதன் சாரதியும் உதவியாளரும் சிறு காயங்களுடன் உயிர்தப்பியுள்ளனர். 

இன்று அதிகாலை 3.00மணியளவில் திருகோணமலையில் இருந்து காத்தான்குடி நோக்கி சென்ற லொறி ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தன்னாமுனையில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. 

இதன்போது லொறி பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளதுடன், அதன் சாரதியும் உதவியாளரும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.