போக்குவரத்துக் குற்றங்களுக்கான தண்டப்பணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக, காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளர்களில் ஒருவருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் போக்குவரத்துக் குற்றங்களுக்கு அறவிடப்படுகின்ற தண்டப்பணத்தில் திருத்தம் செய்வது தொடர்பாக, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று (10) இடம்பெற்றது. இதன்போதே, அமைச்சரவையின் மேற்படி தீர்மானத்தை அமைச்சர் கயந்த கருணாதிலக வெளியிட்டார்.
அதன் சில விபரங்கள் வருமாறு,
கீழ்க்காணும் போக்குவரத்து தவறுகளுக்காக அறவிடப்படுகின்ற தண்டப்பணத்தை 25,000 ரூபாவாக அதிகரித்தல்:
• அங்கீகரிக்கப்பட்ட போக்குவரத்து அனுமதிப்பத்திரங்கள் இன்றி வாகனம் செலுத்துதல்.
• போக்குவரத்து அனுமதிப்பத்திரம் அற்ற சாரதி ஒருவரை சேவைக்கு அமர்த்துதல்.
• மதுபானம் அல்லது போதைப்பொருள் பாவித்ததன் பின்னர் வாகனம் செலுத்துதல்.
• புகையிரத வீதியினுள் முறையற்ற விதத்தில் மோட்டார் வண்டிகளை செலுத்துதல்.
• அங்கீகரிக்கப்பட்ட காப்புறுதி இன்றி வாகனம் செலுத்துதல்

Post a Comment
Post a Comment