முஸ்லிம் பாடசாலைகளின் விடுமுறை காலத்தில் மாற்றம்



முஸ்லிம் பாடசாலைகளுக்கு இன்று முதல் இரண்டாம் தவணைக்கான வழங்கப்பட இருந்த விடுமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இன்று (18) முதல் எதிர்வரும் 27ம் திகதி வரை முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட இருந்ததாக கல்வியமைச்சு கூறியுள்ளது. 

எனினும் எதிர்வரும் 01ம் திகதி ஹஜ்ஜுப் பெருநாள் தினம் என்பதனால் இந்த விடுமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் இரண்டாம் தவணைக்காக எதிர்வரும் 31ம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 08ம் திகதி வரையில் விடுமுறை வழங்கப்பட உள்ளதாக கல்வியமைச்சு கூறியுள்ளது.