-தயாசீலி லியனகே
கடந்த ஒன்றரை வருட காலப்பகுதியில், அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவால் (கோப்), 58 நிறுவனங்கள் சம்பந்தமாக வழங்கப்பட்ட அறிக்கைகளை சரியாக ஆராய்ந்திருந்தால், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை, குத்தகைக்கு விடவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது என்று, கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
“இந்தக் காலப்பகுதியில் நடைபெற்ற 98 கூட்டங்களில், இலங்கைப் பெற்றோலியக்கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை, ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ், மக நெகும, தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியம், துறைமுக அதிகாரசபை உள்ளிட்ட அரச நிறுவனங்களில் பணங்களை சரியாக கையாளாத விடயமும் மோசடியும், கோப்- இனால் வெளிப்படுத்தப்பட்டது“ என்று அவர் தெரிவித்தார்.
இவை சம்பந்தமாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு இவற்றைத் தடுப்பதற்கும் இந்த நிறுவனங்களால் ஏற்படும் இழப்புகளை மீளப்பெறவும், நடவடிக்கை எடுத்திருந்தால், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை, குத்தகைக்கு விடுவதன் மூலம் பெறப்பட எதிர்பார்க்கும் பணத்தை, பெற்றிருக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விடயங்களை, சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தின் அதிகாரிகள் பங்குகொண்ட கூட்டத்தில் தான் வெளிப்படுத்தி இருந்ததாக, அவர் மேலும் குறிப்பிட்டார்.


Post a Comment
Post a Comment