இலங்கை - இந்திய அணிகள் மோதும் 3ஆ-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கண்டி பல்லேகலயில் இன்று தொடங்குகிறது.
.விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
இலங்கை -– இந்திய அணிகளுக்கிடையில் நடைபெற்றுவரும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் காலியில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 304 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், கொழும்பில் எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்ற 2ஆ-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 53 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றிக்கொண்டது.
இந்நிலையில் இவ்விரு அணிகளும் மோதும் 3ஆ-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கண்டி பல்லேகலயில் இன்று தொடங்குகிறது.
இந்த டெஸ்டிலும் வென்று இந்திய அணி ‘ஹெட்ரிக்’ சாதனை புரியுமா? என்று இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர் பார்க்கின்றனர்.
அதேவேளை இறுதிப் போட்டியிலேனும் வெற்றிபெற்று இலங்கை அணி ஆறுதல் அளிக்குமா என்று ரசிகர்கள் ஏங்கி நிற்கின்றனர்.
துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சில் சம பலத்துடன் திகழ்வதால் இந்த டெஸ்டிலும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையில் இந்தியா இருக்கிறது.
இலங்கை அணி ஆறுதல் வெற்றி பெறும் ஆர்வத்துடன் இருக்கிறது. தொடரை முழுமையாக இழக்காமல் இருக்கும் வகையில் இலங்கை அணி வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள். முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத் காயத்தால் விலகியது இலங்கை அணிக்கு மிகப்பெரிய பாதிப்பே.
எனினும் இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் திமுத் கருணாரத்ன (265), குசல் மெண்டீஸ் (212) ஆகியோரும் பந்து வீச்சில் பிரதீப்பும் நல்ல நிலையில் உள்ளனர்.
அதேபோல் இந்தத் தொடரில் ஆரம்பம் முதல் ஒரேசீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் தில்ருவன் பெரேரா.
இவர் அணிக்கு முக்கிய பங்காற்றி வருகிறார். இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது விக்கெட்டுக்களை வீழ்த்தியும் தன் திறமையை காண்பித்த தில்ருவன் துடுப்பாட்டத்திலும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வகையில் ஆடினார்.
இதுவரையில் இரு அணிக ளும் மோதிய 40 போட்டிகளில் இந்தியா 18 டெஸ்டிலும், இலங்கை 7 டெஸ்டிலும் வெற்றிபெற்றுள்ளன. 15 டெஸ்ட் சமநிலையில் முடிந்துள்ளன. சரி பொறுத்திருந்து பார்ப் போம் மூன்றாவது போட்டியில் என்ன நடக்கும் என்று.


Post a Comment
Post a Comment