இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சீனிக்கான விசேட வர்த்தக வரியை இன்று நள்ளிரவு முதல் 8 ரூபாவால் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உலக சந்தையில் சீனியின் விலை வீழ்ச்சியடைந்தமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்தது.
வரி அதிகரிக்கப்படுவதன் ஊடாக உள்நாட்டு சந்தையில் சீனியின் விலை உயர்வடையாது என நிதி அமைச்சு மேலும் குறிப்பிட்டது.
உள்நாட்டு விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியது.
உலக சந்தையில் ஒரு கிலோகிராம் சீனியின் விலை 10 ரூபாவால் வீழ்ச்சியடைந்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்தது.


Post a Comment
Post a Comment