திருப்பதி: துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள வெங்கய்ய நாயுடு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் ரேணிகுண்டாவுக்குச் சென்ற வெங்கய்ய நாயுடு, அங்கிருந்து கார் மூலம் திருமலைக்கு சென்றார். அங்கு அவரை சித்தூர் மாவட்ட கலெக்டர் பிரத்யும்னா, தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் மற்றும் அதிகாரிகள், பா.ஜ க. வினர் வரவேற்றனர். பின்னர் சிறப்பு பூஜையில் பங்கேற்ற வெங்கய்ய நாயுடு, ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
பின் செய்தியாளர்களிடம் பேசிய வெங்கய்ய நாயுடு, துணை ஜனாதிபதி பொறுப்பில், அரசியலுக்கு அப்பாற்பட்டு தன்னிச்சையாக செயல்படுவேன். இப்போது நான் எந்த கட்சியையும் சாராதவன். அமைச்சரவையில் இருந்து விலகியுள்ளேன். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் ஓரிரு நாட்களில் விலகவுள்ளேன். ஏற்கப்போகும் பதவிக்கு ஏற்றவாறு அரசியல் சாசனத்திற்குட்பட்டு கடமையாற்றுவேன் என்றார்.

Post a Comment
Post a Comment