5ஆவது நாளாக பணிப்புறக்கணிப்பு



மின்சார ஊழியர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டாலும் அல்லது அவர்கள் தங்களது கோரிக்கைகளுக்கு சரியான பதில்களை வழங்காவிடினும் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக, இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
மின்சார சபை ஊழியர்கள் தொடர்ச்சியாக 5 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றபோதும், மின் விநியோகத்தில் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்பில் எந்த​தொரு பதிலையும்  அரசாங்கம் வழங்கவில்லையென,மின்வலு மற்றும் மீள்புத்தாக்கத்துறை அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டிய தெரிவித்துள்ளார்.
கடந்த 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம் தீர்வுகள் ஏதும் எட்டப்படாத நிலையில் இன்றும் (17) பணிப்புறக்கணிப்பு தொடர்கின்றது.