(விஷேட நிருபர்)
காத்தான்குடியில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வெள்ளிக்கிழமை இரவு நடாத்திய மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்..
இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர் சில்லறைத்தனமாக விமர்சனங்களை சொல்லுகின்ற நிலையிலிருந்து நமது பிரதேச அரசியல் வாதிகள் மீண்டு வரவேண்டும்.
மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் அன்மையில் நடாத்திய கூட்டத்தில் அவர் ஆற்றிய உரையிலிருந்து 4 நிமிடங்கள் எனக்கு கேட்க கிடைத்தது.
அவரது உரையில் மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் மனச்சாட்சிக்கு முறணாக பேசுகின்றார். உண்மையை முழுமையாக சொல்வதற்கு தயங்குகின்றார். தர்மமாக அல்லது அநியாயமாக அடுத்தவனுடன் நடந்து கொள்ளக் கூடாது என்பது பற்றிய நேர்மை அவரிடமில்லை.
இன்ஷா அல்லாஹ் இன்னுமொரு கூட்டத்திலே அவருக்கு விரிவாக சில விடயங்களை சொல்லுவேன்.
விமர்சனங்களை முன் வைக்கும் போது பெறுமதியான விமர்சனங்களை முன் வைக்க வேண்டும். சில்லறைத்தனமாக விமர்சனங்களை விட்டு விட வேண்டும். இது பற்றி எதிர்காலத்தில் பேசுவோம்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி எதிரியாக இருந்தாலும் அவருடன் நோமையாக நடந்து கொள்ளும் அதற்கு பல உதாரணங்களை நான் கூற முடியும்.
ஒரு விடயத்தில் ஒருவரை எதிர்க்கின்றோம் என்பதற்காக ஆதாரமற்ற விடயங்களை கூற முடியாது.
சகோதரர் சிப்லி பாறூக் அவர்கள் அவரது முதிர்ச்சியை வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த மாதிரியான சில்லறைத்தனமான விமர்சனங்களை விட்டு விட்டு காத்திரமான அரசியல் விமர்சனங்களை செய்ய வேண்டும்.
விருந்தோம்பல் என்பதை நபி (ஸல்) அவர்கள் விரும்பியுள்ளார்கள் நபியவர்கள் கூட தனது இஸ்லாமிய மார்க்க பிரச்சார பணிகளை செய்த போது மக்களை அழைத்து விருந்தோம்பல் செய்துள்ளார்கள். இதனை பலரும் செய்வார்கள் சிப்லி ப}றூக்கும் சாப்பாடு கொடுத்துள்ளார்
இதை வீதியை மறித்து மேடை போட்டு மேடையில் நின்று சொல்லக் கூடிய கருத்தல் இது.
எனவே சிப்லி பாறூக் அவரை மாற்றிக் கொள்ள வேண்டும் உண்மையை முழுமையாக பேசுவதற்கு யதார்தத்தை புரிந்து கொள்ள அடுத்தவர்கள் பக்கமுள்ள நேர்மையை புரிந்து கொள்ள தமது கட்சியின் பக்கமுள்ள தவறுகளை புரிந்து கொள்ள அவர் முயற்சி செய்ய வேண்டும்.
அவருக்கு சில புத்திமதிகளை சொல்ல வேண்டும் அடுத்த கூட்டத்தில் அதனை சொல்வேன்
மக்களுக்கு மட்டுமே விசுவாசமாக இருக்கின்ற புதிய அரசியல் ஒழுங்கு மட்டும்தான் நமக்கு பாதுகாப்பானதாகும்.
அதற்கான உழைப்பைத்தான் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கடந்த 17வருடங்களாக செய்து வருகின்றது தேசிய அரசியல் கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளோம். இதன் மூலம் முழுமையான மக்கள் ஆதரவை பெற்றுக் கொண்டு மக்களுக்காக இன்னும் தீவரமாக மக்களுக்காக உழைப்போம் என்றார்.


Post a Comment
Post a Comment