ஹிஸ்புல்லாஹ் 60 இலட்சம் ரூபாவை காத்தான்குடி நகரசபைக்கு செலுத்த வேண்டும்



இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் 60 இலட்சம் ரூபாவை காத்தான்குடி நகரசபைக்கு செலுத்த வேண்டி உள்ளது!
+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+
(விஷேட நிருபர்)
காத்தான்குடி நகரசபை கட்டடத்தை பயன்படுத்திய வகையில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், 60 இலட்சம் ரூபாவை காத்தான்குடி நகரசபைக்கு செலுத்த வேண்டி உள்ளது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் தெரிவித்தார்.
இன்று (06) காத்தான்குடியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனை அவர் தெரிவித்தார்.