கிழக்கு மாகாண ஆசிரியர் போட்டிப் பரீட்சை



கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் பட்டதாரி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான போட்டிப் பரீட்சை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி நடைபெறவுள்ளதாக, மாகாண அரச சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அம்பாறை, கல்முனை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய நான்கு கல்வி மாவட்டங்களிலும் பரீட்சை நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் விண்ணப்பதாரிகளுக்கான அனுமதி அட்டைகள், தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.