தேங்காய் ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 75 ரூபாவாக இருக்க வேண்டும். அதைவிட அதிக விலைக்கு தேங்காய் விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும் என தெங்கு உற்பத்திச் சபையின் தலைவர் கபில யகன்தவெல தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், தேங்காய் ஒன்றை நுகர்வோரிடம் சேர்க்கும் வரையிலான முழுச்செலவுகளையும் கருத்தில் கொள்கின்ற போது தேங்காய் ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலையினை எழுபத்தைந்து ரூபாவாக வரையறுத்துக்கொள்ள முடியும்.
மேலும் கடந்த வாரம் தேங்காய் ஏலத்தில் தேங்காய் ஒன்றின் விலை 49 ரூபாவாக இருந்தது. எனவே மொத்த விற்பனையாளர்கள் தேங்காய் ஒன்றுக்கு பத்து ரூபாவும் சில்லறை விற்பனையாளர்கள் பத்து ரூபாவும் நிர்ணயிப்பதுடன் இன்னும் ஐந்து ரூபாவை மேலதிகமாக சேர்த்தாலும் தேங்காய் ஒன்றை அதிகபட்ச சில்லறை விலையாக எழுபத்தைந்து ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும்.
அத்துடன் தேங்காய் ஒன்று நூற்றுப் பத்து ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தவறான பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. அதாவது தொழில்துறையில் ஈடுபடுபவர்கள் தேங்காய் கொள்வனவு செய்யும் போது அதனை கிலோ கிராம் அளவிலேயே பெறுகின்றனர். ஆகவே கிலோ ஒன்றின் விலைதான் நூற்றுப்பத்து ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகிறதே தவிர சாதாரண மக்கள் கொள்வனவு செய்யும் தேங்காயின் விலை அதுவல்ல.
மேலும் தேங்காய் ஒன்றை 75 ரூபாவையும் விட அதிக விலைக்கு விற்பனை செய்வதன் மூலம் மக்கள் பாரிய நெருக்கடிகளைச் சந்திக்கின்றனர் என்றார்.


Post a Comment
Post a Comment