MSR மற்றும் Royal youths அமைப்பு இணைந்து நடாத்திய தொழிற்கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு,நேற்று அக்கரைப்பற்று அஸ் ஸிராஜ் தகா வித்தியாலத்தில் இனிதே நிறைவு பெற்றது.
அக்கரைப்பற்று மற்றும் அதனை அண்டிய பலபிரதேச மாணவர்கள், உலமாக்களுக்கான கல்வி பெறும் மாணவர்கள் பலர் இதில் கலந்துகொண்டு பயன்பெற்றதோடு, இந்நிகழ்வில் வளவாளராக சகோதரர் சிராஜ் மஷூர் அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு அரசாங்க கல்வி நிறுவனங்களின் தொழிற்கல்வி வாய்ப்புக்கள் பற்றி தெளிவான விளக்கத்தினை வழங்கியிருந்தார்.
இரண்டு மணிநேரம் நடைபெற்ற இந்திகழ்வு இறுதியில் அக்கரைப்பற்று ஜம்-இய்யத்துல் உலமா அமைப்பின் செயலாளர் ஹபீப் மௌலவி அவர்களின் உரையுடன் இனிதே நிறைவு பெற்றது.
இந்நிகழ்வினை நடாத்த சிறந்த கருத்திட்டமிடலோடு முன்வந்து இறுதிவரைக்கும் நிகழ்வுக்கு பக்கபலமாய் அமைந்த மற்றும் அனுசரனை வழங்கிய MSR அமைப்பினருக்கும் அதன் உறுப்பினர்களுக்கும், வளவாளர்களுக்கும், மற்றும் பாடசாலை அதிபர், ஏனைய அனைவருக்கும் நன்றிகள்.


Post a Comment
Post a Comment