அம்பாறையில் பாராளுமன்ற உறுப்பினரின் கார் மோதி, ஒருவர் உயிரிழப்பு



பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திசாநாயக்க பயணித்த வாகனம் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இன்று அதிகாலை 1.00 மணியளவில் அம்பாறை - கண்டி வீதியில் அம்பாறை, கரங்காவை ஜனரஜ வித்தியாலயத்திற்கு முன்னால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் விபத்தில் படுகாயமடைந்து அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

உகன, திஸ்ஸபுர பிரதேசத்தில் வசிக்கும் ஒருவரே உயிரிழந்துள்ளார். 

காயமடைந்த ஏனைய நபர் அதே வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் கூறினார். 

விபத்தில் பாராளுமன்ற உறுப்பிருக்கு காயம் எதுவும் இல்லை என்பதுடன், சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரின் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.