மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லடி பிரதேசத்தில் இன்று (05) அதிகாலை 2.00 மணியளவில் விபத்து இடம்பெற்றறுள்ளது.
முச்சக்கர வண்டி மின்கம்பத்தில் மோதிய விபத்தில் மட்டக்களப்பு புன்னச்சோலை - குமாரப்புரம் பகுதியை சேர்ந்த மூன்று இளைஞர்கள் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர்
அவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஆலையத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் வழியிலே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர் முச்சக்கரவண்டி முற்றாக சேதமடைந்துள்ளது.
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment
Post a Comment