(க.கிஷாந்தன்)
சைட்டம் நிறுவனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் 21.09.2017 அன்று காலை 8 மணிமுதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
அந்தவகையில் மலையகத்தில் உள்ள சில வைத்தியசாலைகளில் 20.09.2017 அன்று சில வைத்தியர்கள் கடமையில் ஈடுப்பட்டிருந்தாலும், சில வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டிருந்தனர்.
இதனால் இங்கு சிகிச்சைக்காக வருகை தந்த பொதுமக்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் வீடு திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதேவேளை தாதிமார்களாலும் வைத்திய கடமை மேற்கொள்ளப்பட்டது.
வட்டவளை வைத்தியசாலையிலும் இவ்வாறான ஒரு நிலைமையை எம்மால் காணக்கூடியதாக இருந்தது.


Post a Comment
Post a Comment