ஒலுவில் மீனவர் படகு கவிழ்ந்ததில் உயிரிழப்பு



அம்பாறை மாவட்டம், ஒலுவில் பிரதேச கடலில் மீன்பிடிக்கச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் ஒலுவில் 4ஆம் பிரிவைச் சேர்ந்த சம்சுதீன் முஹம்மது பஸீல் (வயது 44) என்பவரே உயிரிழந்துள்ளார். 

அவரது சடலம் மீட்கப்பட்டு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.