பேஸ்புக்கில் வெளியானதா நிர்வாக சேவை வினாத்தாள்?



நிர்வாக சேவை போட்டி பரீட்சையின் தமிழ்மொழி மூலமான வினாத்தாள்கள் ஏற்கனவே வெளியானமை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்திற்கு முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தப் பரீட்சையில் தோற்றிய பரீட்சார்த்தி ஒருவர் பரீட்சைகள் தினைக்களத்தில் இந்த முறைபாட்டை செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
“தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை பரீட்சைக்கு தோற்றிவிட்டு ஒரு மணித்தியாலம் கடந்து பேஸ்புக்கினைப் பார்த்த போது தமிழ் மொழி மூலம் தான் எழுதிய அதே வினாத்தாள் வெளியாகியுள்ளதை அவதானித்ததாகவும், பரீட்சை மோசடி இடம்பெற்றுள்ளமை தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாகவும்“ குறித்த பரீட்சார்த்தி தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் டபிள்யு.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.