திருகோணமலை தனியார் பஸ் சேவைகள் பணிப்பகிஷ்கரிப்பு



திருகோணமலை மாவட்ட தனியார் பஸ் சேவைகள் இன்று பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை நள்ளிரவு முதல் மேற்கொள்கின்றன. 

கிழக்கு மாகாண போக்குவரத்து அமைச்சினால் திருகோணமலை மாவட்டத்தில் மட்டும் 8 தனியார் பஸ் நேர அட்டவணை கட்டுப்பாட்டு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். 

இதனை கண்டித்தும் அவர்களின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாரி கோரியும் இந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.