“ஊக்கமுள்ள பிரஜைகள்”



(க.கிஷாந்தன்)

 கல்வி, பொருளாதாரம், தொழில் வாய்ப்பு உள்நாட்டு அபிவிருத்தி ஊடாக சிறந்ததொரு அரசாங்கத்தை அமைத்து தினமும் சந்தோஷம் படும் அளவிற்கு மக்கள் விடுதலை முன்னணி வழிசமைக்கும். எதிர்கால அரசியலில் மாற்றத்தை கொண்டு வரும்   என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

நுவரெலியா நகர் மத்தியில் 17.09.2017 அன்று இடம்பெற்ற “ஊக்கமுள்ள பிரஜைகள்” மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் மஞ்சுள சுரவீர ஆராச்சி தலைமையில் இடம்பெற்ற இந்த மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

இந்த நாடு வெளிநாட்டு தண ரீதியான கடன் தொகையை பெற்று நாட்டை வீணடித்து முன்னெடுக்கப்பட்டு வந்த அரசியலாகவே தெளிவுப்படுகின்றது. இங்கிலாந்து தொடக்கம் பல்வேறு உலக நாடுகளில் காரணங்களின்றி கடன்களை பெற்று மக்களின் அபிவிருத்தி என போர்வையிட்டு கொண்டு செலுத்துகின்றனர்.

இந்த நிலையில் மத்திய வங்கி பண முறிவு விடயத்தில் ரவி கருணாநாயக்க ஊழலில் ஈடுப்பட்டதை காரணம் காட்டி தந்திரமாக அவரை பதவி நீக்கம் செய்து நாடகம் ஆடினர். உண்மைக்கு புறம்பான செய்திகளை நாளுக்கு நாள் வேறுப்படுத்தி அச்சி ஊடாகங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் என வெளியிட்டன.

ஆனால் உண்மை என்ன என்பது நாட்டின் ஆட்சியாளர்களுக்கு கூட தெரியாதிருப்பது வேடிக்கையான விடயமாகும். ரவியனது நடவடிக்கையை போலவே விஜயதாஸவின் நடவடிக்கையும் அமைந்திருந்தது. நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு கூட ஊழல் தொடர்பான உண்மையான நிலவரங்கள் தெரியவில்லை. அதேபோன்று நாடு எந்த அளவிற்கு கடன் சுமையை சுமக்கின்ற என கூட நாட்டு ஆட்சியாளர்களுக்கு சரியாக தெரியவில்லை.

இப்படி ஒரு அரசாங்கத்தின் ஆட்சியாளர்கள் செயல்பட்டால் நாட்டின் நிலைமை எவ்வாறாக இருக்கும் என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தில் பல்வேறு ஊழல்களும், மோசடிகளும் ஒழித்துக்காட்டப்படும் என ஆட்சி பீடம் ஏறி இன்று பாரியளவில் ஊழல்களும் மோசடிகளும் இடம்பெறகூடிய வகையில் செயல்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

இலட்சக்காணக்கான பணங்களை மோசடி செய்து வரும் நபர்களும் இனங்காணப்படுவதாக கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறி வெறுமனே வார்த்தைகள் விடப்பட்டு வருகின்றது. இவ்வாறான சூழ்நிலைக்கு தொடர்ந்தும் கடன் சுமையை ஏந்தி நீற்கும் இந்த நாட்டின் முன்னேற்றம் எவ்வாறாக தலைதூக்கும்.

இதற்கு முடிவு கட்டுவதற்காக மக்கள் விடுதலை முன்னணி பிராந்தியங்கள் ரீதியாகவும், நடாளாவீய ரீதியாகவும் ஊக்குமுள்ள பிரஜைகள் சங்கத்தை உருவாக்கி அதனூடாக கல்வி பொருளாதாரம் இன ஐக்கியம் ஊழல் அற்ற நல்லதொரு அரசாங்கத்தை உருவாக்க அதன் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து உள்ளது என தெரிவித்தார்.

அந்தவகையில் எதிர்காலத்தில் மக்கள் விடுதலை முன்னணி மாற்றத்தின் ஊடான ஒரு அரசியலை இந்த நாட்டில் முன்னெடுக்கும் என இதன்போது அவர் மேலும் தெரிவித்தார்.