மாநாடும் பொதுக் கூட்டமும்



அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 10ஆவது வருடாந்த மாநாடும் பொதுக் கூட்டமும், சாய்ந்தமருது லீ மெடிலியன் வரவேற்பு மண்டபத்தில் எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ளதாக, அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் செயலாளர் யூ.எல்.எம். பைஸர் தெரிவித்தார்.
2017/2018ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தெரிவு டம்பெறவுள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபதி திருமதி ஜெயனந்தி திருச்செல்வம் பிரதம அதிதியாகவும்,  அஞ்சல் அத்தியட்சகர்களான எம். தம்பிஐயா, எஸ். ஜெகன் ஆகியோர் கௌரவ அதிதியாகவும் பிராந்திய நிருவாக உத்தியோகத்தர் சீ. அருள்செல்வம், அஞ்சல் பயிற்சி கல்லூரியின் பிரதம போதனாசிரியர் பி. நரேந்திரன் ஆகியோர் விசேட அதிதியாகவும் கலந்துகொள்ளவுள்ளனர்.