"நீர் ஏன் இங்கு வந்தீர் என்று எவரும் கேட்க முடியாது நான் எவருக்கும் பயமில்லை"



தேசிய சகவாழ்வு மற்றும் அரச கருமொழிகள் அமைச்சினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் நடமாடும் சேவையின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான நடமாடும் சேவை தேசிய சகவாழ்வு மற்றும் அரச கருமொழிகள் அமைச்சர் மனோ கணேஷன் தலைமையில்  இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
 நிகழ்வில் கலந்து கொண்டு அமைச்சர் மனோ கணேஷன் கருத்து தெரிவிக்கையில்,
" பெரியகல்லாறு  வைத்தியசாலையை  தரமுயர்த்தி  தருவேன் என்றும்,  நான்  சொன்னால்  செய்வேன், நீர் ஏன் இங்கு வந்தீர்  என்று   எவரும்  கேட்க  முடியாது, நான்  அமைச்சர், நான்  எவருக்கும்  பயமில்லை, இம்மாவட்டத்தில்  பல  குறைபாடுகள் உள்ளன, அவற்றை தீர்த்து வைப்பேன், எதிர்காலத்தில் மட்டக்களப்பு  மாவட்டத்தின்  மக்கள் பிரதிநிதியாக  செயற்பட  உள்ளேன் .
இப்பிரதேசத்தின்  பல  மக்கள்  பிரதிநிதிகளுக்கு சிங்கள மொழி  தெரியாது, ஆங்கிலம்  தெரியாது, பாராளுமன்றத்தில்  இனவாதம்  பேசி   காலத்தைக் கழித்துக்கொண்டிருக்கிறார்கள் "   
இந் நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், எஸ்.வியாழேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.