மாணவா்கள் ஒவ்வொருவரும் உங்களுக்கென ஒரு இலட்சியத்தை வகுத்துகொள்ளுங்கள்



மாணவா்கள் ஒவ்வொருவரும் உங்களுக்கென இரு இலட்சியத்தை, இலக்கை வகுத்துக்கொண்டு அதனை நோக்கி பயணிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. 

அதற்காக ஆசிரியர்கள் உங்களுக்கு வழிகாட்டுவார்கள் என வடக்கு மாகாண கல்வி அமைச்சர் க. சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளாா். 

நேற்று (21) கிளிநொச்சி சிவபாத கலையக பாடசாலையில் இடம்பெற்ற பாடசாலையின் முதலாவது பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவா் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அவா் மேலும் தெரிவிக்கையில் 

மாணவா்கள் நல்ல பண்புடையவா்களான வளர வேண்டும் வளர்க்கப்படவும் வேண்டும். 

சிறு வயது முதல் இருந்தே பெரியோரை பெற்றோரை ஆசிரியரை மதித்து நடக்கவும் சமூகம் மதிக்கதக்க நல் பிள்ளைகளாக வளரவும் வேண்டும் எனக் மாகாண கல்வி அமைச்சர் குறிப்பிட்டார். 

எல்லா மாணவா்களிடம் எல்லாத் திறமைகளும் இருக்கும் என எதிர்பார்க்க முடியாது. 

குறைகளும் இருக்கும் நிறைகளும் இருக்கும், பலமும் இருக்கும் பலவீனமும் இருக்கும் எனவே ஆசிரியர்கள் மாணவா்களிடம் காணப்படுகின்ற நிறைகளையும், பலத்தையும் பாராட்ட வேண்டும், ஆசிரியர்களின் வாயிலிருந்து முதலில் பாராட்டும் வார்த்தைகளே வரவேண்டும், மாணவர்களை தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.