அம்பாரை வீதி விபத்தில் ஒருவர் பலி



அக்கரைப்பற்று, அம்பாரை வீதியில், இன்று மாலை மோட்டார் சைக்கிள்கள் மோதியதில், 8ஆம் கட்டையைச் சேர்ந்த, தம்பி என்பவர் மரணமானார் என்று, எமது விசேட செய்தியாளர் முதற்கட்ட தகவலை வழங்கியுள்ளார்.
அக்ரைப்பற்று,6ம் குறிச்சியினைச் சேர்ந்தவர், செலுத்திய மோட்டார் சைக்கிளில், 8ம் கட்டையில் இருந்து அக்கரைப்பற்றுக்கு வந்து பொருள் கொள்வனவு செய்து விட்டு,திரும்பும் வழியில் தம்பி (47 வயது) உடன் மோதியதில்,இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. ஜனாசா,தற்போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.