-நடராஜன் ஹரன்
“போதைப்பொருள் பாவனையை ஒழிப்போம்” எனும் தொனிப்பொருளில் கோறளைப்பற்று பிரதேச செயலாளரின் வழிகாட்டலில் சமுர்த்தி சங்கம், மக்கள், பாடசாலை மாணவர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடுசெய்த விழிப்பூட்டல் பேரணி, வாழைச்சேனை பிரதேசத்தில், நேற்று (18) இடம்பெற்றது.
வாழைச்சேனை - கல்மடு பிரதான வீதியில் இருந்து ஆரம்பித்த மேற்படி பேரணியானது, விணாயகபுர எல்லை வீதி ஊடாகச் சென்று பல்தேவை மண்டபத்தை சென்றடைந்தது. அங்கு பிரதேச மக்களுக்கான போதைப் பாவனையில் ஏற்படும் பாதக நிலமை தொடர்பான விழிப்பூட்டும் கருத்துரைகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment