(க.கிஷாந்தன்)
அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் டிக்கோயா சவூத் வனராஜா பகுதியில் 19.09.2017 அன்று மாலை 6.30 மணியளவில் பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததனால் அட்டன் காசல்ரீ, ஒஸ்போன், நோட்டன்பிரிஜ் வீதியூடான பொது போக்குவரத்து பல மணி நேரம் ஸ்தம்பிதமடைந்துள்ளது.
இந்த மரம் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். மேலும் மரத்திற்கு கீழே இருந்த ஆலயம் ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
இந்த மரத்தினை வெட்டி அகற்றும் பணியில் பிரதேச பொது மக்களும், அட்டன் பொலிஸாரும் செயப்பட்டு வருகின்றனர்.


Post a Comment
Post a Comment