மஹிந்தவின் வீட்டுக்குள் கத்தியுடன் நுழைய முயன்றவருக்கு மறியல்



கொழும்பு-07, விஜயராம மாவத்தையில் உள்ள, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின், உத்தியோகபூர்வ வீட்டுக்குள், அத்துமீறி நுழைய முற்பட்ட, சந்தேகநபர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர், வியாழக்கிழ​மை இரவு 7 மணியளவில், நுழைவதற்கு முற்பட்டுள்ளார் என்றும், வீட்டிலிருந்த பாதுகாப்பு பிரிவினரே, அந்த நபரை பிடித்து, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அவரை சோதனைக்கு உட்படுத்திய போது, இடுப்பில் மறைத்துவைத்திருந்த கத்தியையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
கடுமையான பாதுகாப்புடன் கூடிய அந்த பிரதேசத்துக்குள் சந்தேகநபர் நுழைந்தமை, சந்தேகத்துக்கிடமாக உள்ளதாக தெரிவித்த பொலிஸார், அவருடைய நோக்கம் தொடர்பில் விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளதாக தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
சந்தேகநபரை பொலிஸார், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, அவரை எதிர்வரும் 6ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.