கிளிநொச்சியில்,உயர் தொழில் வழிகாட்டல் கண்காட்சி



வடமாகாண கல்வி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் 2017ம் ஆண்டிற்கான உயரகல்வி தொழில் வழிகாட்டல் கண்காட்சியை வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் திறந்து வைத்தார். 

இன்று காலை 9 மணியளவில் குறித்த நிகழ்வு கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. 

குறித்த நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சர், கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

இதன் போது மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் கருத்துரைகளும் இடம்பெற்றது 

இதுதவிர "சமதளத்தில் ஒன்றாக" எனும் தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்ட மாகாண மட்ட வணிக கண்காட்சியும், தொழில் சந்தையும் இன்று கிளிநொச்சியில் வடமாகாண முதலமைச்சரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

குறித்த கண்காட்சி இன்று காலை 9.30 மணியளவில் கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

குறித்த கண்காட்சியில் மாற்றுதிறனாளிகள் கையிட்டு செய்த பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன், விற்பனையும் செய்யப்பட்டமை குறிப்பிடதக்கது.