கிழக்கு மாகாணம் தழுவிய இவ்வருடத்திற்கான GREAT EAST உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் கண்காட்சி எதிர்வரும் செப்டம்பர் 14 மற்றும் 15 (வியாழன், வெள்ளி) ஆகிய திகதிகளில் ஹோட்டல் கிரீன் கார்டன் – கல்லடி, மட்டக்களப்பு (கல்லடி மணிக்கூட்டுக் கோபுரம் அருகில்) இடம்பெறவுள்ளது.
பிரால்யமிக்க அரச, தனியார் பல்கழைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பங்குபற்றலுடன் இடம்பெறவுள்ள மேற்படி கண்காட்சியில் மாணவ்கள், தொழில் தேடுவோர் மற்றும் பெற்றார்கள் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டு பயன்பெற முடியும்.
மிகச்சிறந்த வளவாளர்களின் பங்குபற்றலுடன் இடம்பெறவுள்ள இக்கண்காட்சி எதிர்கால தொழிற்சந்தைக்கு ஏற்ற வகையில் உயர்கல்வி வாய்ப்புக்களைத் தெரிவுசெய்தல் மற்றும் தெழில் தேடுவோருக்கான தொழில் வாய்ப்புக்களை இனங்காணல் என்ற கருப்பொருளில் இடம்பெறுகின்றது.
முற்றிலும் இலவசமாக இடம்பெறவுள்ள இக்கண்காட்சியில் அரச, தனியார் பல்கழைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் பங்குபற்றுனர்கள் தனித்தனியாக நேரடியாக கலந்துரையாடி தமது துறைகளில் உள்ள உயர்கல்வி மற்றும் தொழில் வாய்ப்புக்கள் தொடர்பான தெளிவுகளை பெறமுடியும்.
குறிப்பாக இமமுறை க.பொ.த (உ/த) பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு மிகப்பிரயோசனமான ஒன்றாக அமையும் இக்கண்காட்சியில் இமமுறை க.பொ.த (உ/த) பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் தமது பெற்றாருடன் கலந்து பயன்பெறுமாறு அழைக்கப்படுகின்றனா்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் பொறியியலாளர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்களால் இக் கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
இக் கண்காட்சிக்கு எமது ஸாஜில் மீடியா நெட்வேர்க் ஊடக அனுசரணை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment