மாணவர்கள் மீது குண்டாந்தடி பிரயோகம்; 18 மாணவர்கள் காயம்



மாலபேயிலுள்ள சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக, வைத்திய பீட மாணவர்கள், இன்று கொள்ளுப்பிட்டியில் மேற்கொண்ட ஆர்பாட்டப் பேரணி மீது, பொலிஸார் குண்டாந்தடி பிரயோகம் மேற்கொண்டதில் 18 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
அத்துடன், பொலிஸார் ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக கண்ணீர் புகை மற்றும் நீர்தாரை  பிரயோகமும் மேற்கொண்டுள்ளனர்.  
இச்சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று மாணவர்களையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.