2017 உலகின் பொருளாதார பாதுகாப்பு மிகுந்த நகரங்களின் பட்டியலில் டோக்கியோ முன்னிலையில்



2017 ஆம் ஆண்டின் உலகின் பொருளாதார பாதுகாப்பு மிகுந்த நகரங்களின் பட்டியலில், மீண்டும் டோக்கியோ முன்னிலையிலுள்ளது.
இதேவேளை, டெல்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்கள் முறையே 43 , 45 ஆம் இடங்களை பிடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இலத்திரனியல், சுகாதாரம் , உட்கட்டமைப்பு மற்றும் தனிநபர் பாதுகாப்பு உள்ளிட்ட 49 விடயங்களை உள்ளடக்கிய வகையில், உலகின் பொருளியல் நிபுணர்களினால் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை, தென்னாசியாவின் Dhaka , Karachi ஆகிய நகரங்களும், தென் கிழக்காசியாவின் மெனிலா , ஹோ ச்சி மின்ஹ் மற்றும் ஜகார்டா ஆகிய மூன்று நகரங்களும் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவின் கெய்ரோ , டெஹ்ரான் ஆகிய நகரங்களும் பட்டியலின் முதல் 10 இடங்களை பிடித்துள்ளன.