சுமார் 26 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் சிலவற்றுடன் ஶ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் அலுவலக ஊழியர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த தங்க ஆபரணங்கள் 5 கிலோவிற்கும் அதிக நிறையுடையவை என சுங்கப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை, விமான நிலையத்தின் வரவேற்புப் பகுதியில் இன்று காலை கைது செய்யப்பட்ட குறித்த நபரிடம் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.


Post a Comment
Post a Comment