(க.கிஷாந்தன்)
டயகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டயகம கிழக்கு தோட்டத்தின் முதலாம் பிரிவில் ஆகுரோயா ஆற்றிலிருந்து 2 வயதுடைய பெண் குழந்தை ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த குழந்தை தனது வீட்டிற்கு பின்புறமாக உள்ள ஆற்றில் மூழ்ந்த இடத்திலிருந்து சுமார் 20 அடி தூரத்திலேயே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் 26.10.2017 அன்று மதியம் 1 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக டயகம பொலிஸார் தெரிவித்தனர்.
வீரதிருமகன் டிலுஷி என்ற 2 வயதுடைய பெண் குழந்தையின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த குழந்தையின் சடலம் டயகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை டயகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Post a Comment
Post a Comment