கடற்படை வீரர் காலையில் சடலமாக மீட்பு; கொலையா? தற்கொலையா?



திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள கிளப்பன்பேர்க் கடற்படை முகாமிலிருந்து கடற்படை வீரர் ஒருவரின் சடலம் கடற்படையினரின் உதவியுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சீனக்குடா பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

கெக்கிராவ கல்நெவ பகுதியைச் சேர்ந்த பீ.எம். புஷ்பகுமார (வயது (28) எனும் கடற்படை வீரரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். 

நேற்றிரவு (25) முகாமிற்கு தூங்கச் சென்ற கடற்படை வீரரே இன்று காலையில் சடமாக கிடந்ததாக சீனக்குடா பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஸ்தலத்திற்கு விரைந்த பொலிசார் சடலத்தை மீட்டு நீதிமன்ற அனுமதியுடன் வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளதோடு, இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.