வங்கதேசத்திற்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ள ரோஹிஞ்யா முஸ்லிம்களில் 58% சதவீதத்தினர் குழந்தைகள் என்று ஐ.நா. வின் புதிய அறிக்கை கூறியுள்ளது.
மேலும், அங்கு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள குழந்தைகள் பலர் தொற்றுநோய்களாலும் ஊட்டச்சத்துக் குறைபாடுகளாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக குழந்தைகள் நல சர்வதேச அமைப்பான யுனிசெஃப் கூறியுள்ளது.
இதுகுறித்து ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபை தரப்பில்,
ரோஹிஞ்யா குழந்தைகள் அபாயகரமான எதிர்காலத்தை எதிர்நோக்கியுள்ளனர். அவர்கள் ஏமாற்றம், வலி போன்ற விபரிக்க முடியாத துன்பத்தை அனுபவிக்கின்றனர். வங்கதேசத்தில் அகதிகளாக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள ரோஹிஞ்யா குழந்தைகளில் ஐந்தில் ஒரு குழந்தை ஊட்டச்சத்துக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 14,500 குழந்தைகள் தொற்று நோய்களாலும், ஊட்டச்சத்து குறைபாட்டாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். மியன்மாரில் ராக்கைன் மாவட்டத்தில் ரோஹிஞ்யா முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் குறைந்த அளவிலேயே எங்களுக்குத் தெரியும். கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து ராக்கைன் மாவட்டத்திற்கு செல்ல ஐ.நா. வின் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அனுமதிக்கப்படவில்லை


Post a Comment
Post a Comment