கணக்காய்வாளர் நாயகம் தயாரித்த தேசிய கணக்காய்வு சட்டமூலத்தை தனிநபர் பிரேரணையாக பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துந்நெத்தி பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் இன்று கையளித்தார்.
அமைச்சரவை தொடர்ந்து தேசிய கணக்காய்வு சட்டமூலத்தை பாராளுமன்றில் சமர்ப்பிப்பதில் தாமதம் காட்டுவதால், கணக்காய்வாளர் தயாரித்த கணக்காய்வு திருத்த சட்டமூலத்தை அமைச்சரவை திருத்தத்திற்கு உட்படுத்துவதற்கு முன்னர் அனைத்து உள்ளடக்கத்துடனும் தனிநபர் பிரேரணையாக பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் தாம் கையளித்ததாக சுனில் ஹந்துந்நெத்தி குறிப்பிட்டார்.
அமைச்சரவை இழுத்தடிப்பு செய்தால், தனிநபர் பிரேரணை தொடர்பில் கட்சித் தலைவர்கள் தீர்மானித்து, சபையில் சமர்ப்பித்து அதனை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.


Post a Comment
Post a Comment