(சுஹைப் உமறுலெவ்வை)
அக்கரைப்பற்று தேசிய பாடசாலைக்கு முன்னாலும் ஜுனிய வித்தியாலயத்திற்கு அருகாமையிலும் உள்ள வீதி கடந்த பல தசாப்தங்களாக அபிவிருத்தியோ புனரமைப்போ இன்றி காணப்பட்டதே கடந்தகால வரலாறாகும்.
கடந்த பல வருடங்களாக மழை மற்றும் வெள்ள காலங்களில் தேசிய பாடசாலைக்கும் மற்றும் 06 ஆம் குறிச்சி சின்னப் பாடசாலைக்கு அவ்வீதியினால் செல்லும் மாணவர்கள் நனைந்தவாறு றவுசறை உயர்த்திக் கொண்டு பாடப்புத்தகங்களை தலையில் சுமந்தவாறு கால் நடையாக அவ்வீதியினால் செல்வதே கடந்தகால வரலாறாகும்.
அப்பாதை விடயமாக கடந்த காலங்களில் பலமுறை பல செய்திகளை அவ்வப்போது அதனுடன் தொடர்புடைய உரிய பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் அறிந்து கொள்ளும் வகையில் வெளியிட்டிருந்தேன் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இவற்றுக்கு உடன் தீர்வு காணும் வகையில் அக்கரைப்பற்று தேசிய பாடசாலையின் முன் வீதி கொங்கிறீட் வீதியாக போடப்பட்டு 2017.10.01 ஆந் திகதி உலக சிறுவர் தினமாகிய இன்று முற்றாகப் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
அப்பாதையினைப் போடுவதற்காக பல வழிகளிலும் உதவிய அதனுடன் சம்மந்தப்பட்ட அனைவருக்கும் அப்பிரதேச மக்கள் மகத்தான நன்றியினைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றனர்.



Post a Comment
Post a Comment