ஏறாவூர் தமிழ் பகுதி படுகொலையைக் கண்டித்து



நேற்று முன் தினம் ஏறாவூர் தமிழ் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட 
மதுஷந்தி (தாய்) மதூஷன் (மகன்)
இரட்டை படுகொலையை வன்மையாக கண்டித்தும் நீதி கோரியும் ஏறாவூர் முஸ்லிம்களால் இன்று ஜும்மா தொழுகையின் பின் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது!
ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பேரணியில் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
படுகொலை செய்யப்பட்ட மதுஷந்தி(26), மதூஷன்(11) ஆகியோரின் உறவுகளுக்கு பேரணியின் நிறைவில் ஆழ்ந்த அனுதாபம் தெரிவிக்கப்பட்டது.