ஜனாபதி மைத்திரி,காரில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்களின் ஆதங்கத்தைக் கேட்டறிந்தார்





ஜனாதிபதி மைத்திரிபால, யாழில் இன்று ஆர்ப்பாட்டத்துக்கு மத்தியிலும் இந்துக் கல்லுாரி நிகழ்வில் பங்கேற்றார். காரில் இருந்து இறங்கி ஆரப்பாட்டக் காரர்களின்  ஆதங்கத்தை கேட்டறிந்தார்.


இதேவேளை,அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ். இந்துக் கல்லூரிக்கு முன்னால் தற்போது எதிர்ப்பு பேராட்டம் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் கூறினார். 

இந்தப் போராட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். 

அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு உரிய தீர்வு வழங்கப்படாத நிலையில் ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு வருகை தருவதற்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது. 

இன்றைய தினம் யாழ். இந்துக் கல்லூரியில் நடைபெறுகின்ற தேசிய தமிழ் தின நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்கின்றார். 

இந்நிலையில் யாழ். நகரப்பகுதி மற்றும் நிகழ்வு இடம்பெறும் இடங்களில் போராட்டம் மற்றும் வன்முறைகளை தூண்டும் வகையில் செயற்படுபவர்களை கைதுசெய்வதற்கும், எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்க முடியாதவாறும் யாழ். பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவினை நேற்று பெற்றனர். 

எவ்வாறாயினும் தற்போது யாழ். இந்துக் கல்லூரிக்கு முன்னால் எதிர்ப்பு போராட்டம் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் கூறினார். 

அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் கடந்த 19 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.