எந்த நேரத்திலும் விளக்கமளிக்க பிரதமர் தயார்



பிணை முறி மோசடி விவகாரம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க எந்த நேரத்திலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து பிரதமர் அலுவலகம் வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

ஆணைக்குழு முன்னிலையில் பிரதமர் குறித்து தெரிவிக்கப்பட்ட விடயங்களுக்கு விளக்கமளிக்க, எந்த நேரத்திலும் ரணில் விக்ரமசிங்க தயாராக இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.