உப்பாற்றருகில், உரசியது காரும் பஸ்சும்



-அப்துல்சலாம் யாசீம், தீஷான் அஹமட்,எப்.முபாரக்
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பாறு பாலத்துக்கு அருகில் காரொன்றும் பஸ்ஸொன்றும் இன்றுக் (11)காலை மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயமடைந்துள்ளனரென, பொலிஸார் தெரிவித்தனர்.
இருவர், மூதூர் தள வைத்தியசாலையிலும் இருவர் கிண்ணியா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டதுடன், அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளாரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.