நாவற்குழி பாலம் புனரமைப்பு காரணமாக நேரமாற்றங்கள்





யாழ்ப்பாணத்திற்கும் - நாவற்குழிக்கும் இடையிலான புகையிரத பாதையில் உள்ள நாவற்குழி பாலம் புனரமைப்பு வேலைத்திட்டம் எதிர்வரும் 23 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை ஐந்து நாட்கள் இடம்பெறுகின்றது. 

இந்த செயற்றிட்டத்திற்கு இந்திய அரசாங்கத்தின் பங்களிப்பு என்பது பெருமளவு உள்ளதுடன், 178 மில்லியன் ரூபா செலவில் இதற்கான வேலைத்திட்டங்கள் முன்னேடுக்கப்படுகின்றது. 

குறித்த பாலத்தில் நிலைய ஆழப்பகுதியானது தேசமடைந்த நிலையில் உள்ளது. 

இந்த நிலையில் அதனை புதிய உத்தேச முறையிலான ஆழமாக்கும் முறையினை பயன்படுத்தி குறித்த பாலம் அமைக்கப்படவிருப்பதாக பாலத்தினை புனரமைக்கும் திட்ட பொறியிலாளர் தெரிவித்தார். 

எனவே, எதிர்வரும் 23 ஆம் - 27 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் திருத்த வேலையில் காரணமாக நாவற்குழியில் புகையிரத நிலையம் வரை சேவைகள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனடிப்படையில், பயணிகள் தமது ஆசனப்பதிவுகளை புங்கன்குளம், யாழ்ப்பாணம், கொக்குவில், கோண்டாவில், சுன்னாகம், மல்லாகம், தெல்லிப்பளை மற்றும் காங்கேசன்துறை ஆகிய பகுதிகளை சேர்ந்த புகையிரத நிலையங்களில் மேற்கொள்ள முடியாது என்று புகையிரத கட்டுப்பாட்டு உயரதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே பயணிகள் தமது பயணங்களை நாவற்குழி புகையிரத நிலையத்திலிருந்து மேற்கொள்ள முடியும் என்று தெரிவி்க்கப்பட்டுள்ளது. 

இதற்கான நேரமாற்றங்கள் மிகவிரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.