விமானப்படை உத்தியோகத்தர் நீரில் மூழ்கி பலி




அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை மஹதிவுல்வெவ குளத்தில்  நீராடச்சென்ற விமானப்படை உத்தியோகத்தர் ஒருவர் இன்று (18) மாலை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் கிபிஸ்ஸ-நாகல்வெவ பகுதியைச்சேர்ந்த  ஹபுகொட கலகாவகெதர நோமன் ஜெயரெட்ண (33) என தெரிய வந்துள்ளது.
கட்டுநாயக்க விமானப்படை தளத்திலிருந்து மொறவெவ விமானப்படை தளத்திற்கு கட்டிட நிர்மானப்பணிக்காக வந்த 15 பேர் இன்றைய தினம் விடுமுறை  காரணமாக குளத்தில் நீராடச்சென்றிருந்த போதே இவர் நீரில் மூழ்கியதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த விமானப்படை வீரரின் சடலம் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பி​ல் மொறவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.