இந்திய ராணுவ முகாம் மீது தற்கொலைதாரிகள் தாக்குதல்




செவ்வாய்க்கிழமை இந்திய நேரப்படி 4.00 மணிக்கு தொடங்கிய இந்த தாக்குதலில் மூன்று இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் காயமடைந்துள்ளனர்.
தாக்குதால்தாரிகளுடன் பாதுகாப்பு படையினர் தொடந்து துப்பாக்கி சூடு நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீநகர் சர்வதேச நிலையத்துக்கு வெளியே மிகவும் பாதுகாப்பு வலுவூட்டப்பட்ட பகுதியில் இந்த ராணுவ முகாம் அமைந்துள்ளது..
முன்னதாக பிபிசியிடம் பேசிய விமான நிலைய அதிகாரிகள் , விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், விமானநிலைய பணியாளர்கள் , பயணிகள் அல்லது வாகனங்கள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை என்று தெரிவித்த நிலையில், விமான நிலையத்துக்கு செல்லும் சாலைகள் தற்போது திறந்து விடப்பட்டுள்ளதாக வெளியான தக்வல்கள் தெரிவிக்கின்றன.