லாஸ் வெகஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி இரங்கல்



அமெரிக்காவின் லாஸ் வெகாஸ் துபபாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது இரங்கல்களைத் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாகவும் ஜனாதிபதி வௌியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ள ஜனாதிபதி உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கும் தனது அனுதாபங்களை வௌியிட்டுள்ளார்.
இசை நிகழ்ச்சியொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 59 பேர் கொல்லப்பட்டதுடன், 527 பேர் காயமடைந்துள்ளனர்.