Mohamed Asmy,Waseem Akram
ஏறாவூரிற்கு விஜயம் செய்த சுனில் கந்துன்னெத்தி MP - நஸீ்ர் ஹாஜியாருக்கு நேரில் சென்று பாராட்டு...
இன்று ஏறாவூருக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த மக்கள் விடுதலை முன்னனி இன் நாடாளுமன்ற உறுப்பினரும் கோப் விசாரணை குழுவின் தலைவருமான சுனில் ஹந்துன்நெத்தி ஏறாவூரின் பிரபல சமூக சேவகரும் திடீர் மரண விசாரணை அதிகாரியுமான நஸீர் ஹாஜியாருக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னனி இன் பிராந்திய அமைப்பாளர் முஸம்மில் ஊடாக நஸீர் ஹாஜியாரின் வீட்டுக்கு நேரில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி ஏறாவூர் பிரதேசத்தில் நஸீர் ஹாஜியாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் சமூக செயற்பாடுகள் தொடர்பாக அறிந்து கொண்டதுடன் , நோயாளிகள் மற்றும் அல்லல்படும் மக்களுக்காக அவர் ஆற்றி வரும் பணிகளை பாராட்டியதுடன் தன்னால் இயலுமான ஒத்துழைப்புக்களை வழங்க இருப்பதாகவும் தெரிவித்ததுடன் , நஸீர் ஹாஜியாருடன் சென்று நோயாளிகள் பலரின் வீடுகளுக்கு சென்று நிலைமைகளை நேரில் பார்வை இட்டதுடன், பாத்திமா நிலுபா உட்பட சிலரின் நிலைமைக்காக கண்ணீர் மல்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து ஏறாவூர் ஆதார வைத்தியசாலை மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலை என்பவற்றுக்கு விஜயம் செய்து அங்குள்ள உயர் அதிகாரிகள் மற்றும் நோயாளிகளை சந்தித்து குறித்த இடங்களில் உள்ள குறை நிறைகள் தொடர்பில் கலந்துரையாடினர்.
சமூக சேவைகள் மூலமாக ஏறாவூர் மக்களின் மனங்களில் மட்டுமல்லாது தேசிய ரீதியாகவும் தனக்கென ஒரு அடையாளத்தை பெற்றுள்ள நஸீர் ஹாஜியார் அவர்களின் பணிகளை அல்லாஹ் பொருந்திக் கொண்டு அவருக்கு உடல் உள ஆரோக்கியத்தை வழங்கிட செய்வானாக
எழுத்தாக்கம் Mohamed Asmy br
எழுத்தாக்கம் Mohamed Asmy br


Post a Comment
Post a Comment